Can Everyone Learn?

எல்லோராலும் படிக்க முடியுமா?

Prema - Auto Driver's Daughter in Mumbai

மும்பையில் ஆட்டோ ஒட்டும் தமிழகத்தை சேர்ந்த, ஆட்டோ டிரைவர் ஜெயக்குமாரின் இரண்டாவது மகள் பிரேமா வாடகை வீட்டில் வசித்து வந்தும், பள்ளிக்கல்வியை தமிழ் மீடியத்தில் படித்தும், “சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்’ தேர்வில், 800க்கு, 607 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவரால் முடிந்தது உங்களாலும் முடியும். பிரேமாவிற்கு, தமிழக அரசின் சார்பில், 10 லட்சம் ரூபாய், ஊக்கத் தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

 

முத்தாய்ப்பாக...

சி.ஏ. படிப்பது என்று தீர்மானமாக முடிவு செய்துவிட்டால், அசாத்திய உழைப்பு தேவை. கம்பெனிச் சட்டங்கள், வரிவிதிப்பு விதிகள், கணக்கெழுதும் முறைகள் என ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரமாவது படித்தால், சி.ஏ. ஆவது உறுதி. இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி இப்போது 8 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் 10 சதவிகிதத்துக்கு மேல் வளர்ச்சி காணும்போது இன்னும் நிறைய ஆடிட்டர்கள் நமக்குத் தேவைப்படுவார்கள்.

ஐ.சி.டபிள்யூ.ஏ.(இந்திய உற்பத்திச் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காளர்கள்)

காஸ்ட் அக்கவுன்டிங் என்கிற இந்த படிப்பு பற்றி பலருக்கும் தெரிவதில்லை. எல்லா நிறுவனங்களுக்கும் ஆடிட்டிங் முக்கியம் என்கிற மாதிரி தொழிற்துறைக்கு காஸ்ட் அக்கவுன்டிங் முக்கியம். ஒரு பொருளை தயாரிக்க ஆகும் செலவுகள், அதற்கான முதலீட்டு ஆதாயங்களைப் பற்றி நிறுவனங்களுக்குத் தெரிவிப்பது காஸ்ட் அக்கவுன்டன்டின் முக்கிய பணி. தற்போது நிதிக்கணக்கியல், மேலாண்மை கணக்கியல், செலவுக்கட்டுப்பாடு, நிதிப்பயன்பாடு, நிதித்தணிக்கை, வியாபார நுணுக்கம், புதிய முதலீடு போன்றவற்றிற்கு ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஆட்கள் தேவைப்படுகிறது.இதற்கு ஐ.சி.டபிள்யூ.ஏ., படித்தவர்கள் அதிகமாக தேவைப்படுகின்றனர். இப்பாடப்பிரிவில் சேர வயது வரம்பு கிடையாது. பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். வணிகவியல், வணிக நிர்வாகவியல் போன்ற இளநிலைப் பாடப்பிரிவுகளை படித்தவர்களுக்கு ஐ.சி.டபிள்யூ.ஏ., எளிதானதாக இருக்கும். ”இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அண்ட் வொர்க் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா’என்கிற கொல்கத்தாவில் இருக்கிற இன்ஸ்டிடியூட் மூலமாகத்தான் ஐ.சி.டபிள்யூ.ஏ. படிப்பை படிக்க முடியும். பிளஸ்டூ முடித்தவுடன் இந்த இன்ஸ்டிடியூட்டிற்கென நாட்டில் உள்ள 423 மையங்களில்ஏதேனும் ஒன்றில் விண்ணப்பித்து படிப்பைத் தொடங்கலாம். ஒவ்வொரு வருடமும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் மட்டும் தேர்வு நடைபெறும். வருடத்தில் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் இந்த படிப்பை படிக்க விண்ணப்பிக்கலாம். ஆனால், ஜூன் மற்றும் டிசம்பரில்தான் தேர்வு எழுத முடியும். ஐ.சி.டபிள்யூ.ஏ. படிப்பில் மூன்று நிலைகள் உள்ளன.

  • ஃபவுண்டேஷன்
  • இன்டெர்மீடியேட்
  • ஃபைனல் ஸ்டேஜ்

என இந்த மூன்று நிலைகளை ஒவ்வொன்றாக முடிக்க வேண்டும். சி.ஏ. படிப்பில் வரக்கூடிய காஸ்டிங், அக்கவுன்ட்ஸ், வரி மற்றும் சட்டப் படிப்புகள் இந்தப் படிப்பிலும் இருக்கிறது. பி.எஸ்.சி., இன்ஜினீயரிங் என எந்த இளநிலை பட்டம் முடித்தவர்களும் இந்த காஸ்ட் அக்கவுன்டிங் படிப்பை படிக்கலாம். இளநிலை பட்டம் பெற்றவர்கள் நேரடியாக இன்டெர்மீடியேட் நிலைக்குப் போகலாம். அவர்கள் ஃபவுண்டேஷன் நிலை படிக்க வேண்டியதில்லை. இன்டெர்மீடியேட் நிலையில், இரண்டு குரூப் இருக்கிறது. இந்த குரூப்பில் மூன்று பேப்பர்கள் இருக்கும். இந்த மூன்று பேப்பர்களிலும் தலா 40 மதிப்பெண் குறைந்தபட்சமாகவும், மூன்று பேப்பரின் மதிப்பெண்னை கூட்டினால் 150 மதிப்பெண்களும் வர வேண்டும்.இந்த இரண்டு கண்டிஷனில் ஒன்று தவறினாலும் அந்த குரூப் பேப்பர்கள் அனைத்தையும் எழுத வேண்டும். இப்படிதான் ஃபைனல் நிலையும் இருக்கும். ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்யக்கூடிய திறன் படைத்தவர்களால்தான் திறமையான காஸ்ட் அக்கவுன்ட்டன்ட்-ஆக பணிபுரிய முடியும். அதற்கு தகுந்த வகையில் மாணவர்களை தயார்படுத்துகின்றனர். இந்த தேர்வுக்கு ஐ.சி.டபிள்யூ.ஏ. இன்ஸ்டிடியூட் மூலமாகவும், தனியார் பயிற்சி மையங்கள் மூலமாகவும் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். இறுதித் தேர்வு முடிந்து தேர்ச்சியடைந்த பின்பு ஐ.சி.டபிள்யூ.ஏ. உறுப்பினராக பதிவு செய்துகொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு :இந்தியாவில் சுமார் எட்டு லட்சம் நிறுவனங்கள் இருக்கிறது. ஆனால், குறைந்தளவிலேயே காஸ்ட் அக்கவுன்ட்டன்டுகள் இருக்கிறார்கள். இந்த படிப்பை முடித்தவர்கள் வேலைக்கும் போகலாம் அல்லது சொந்தமாக காஸ்ட் அக்கவுன்டிங் பிராக்டீஸ் செய்யலாம். வேலைக்குப் போக நினைக்கிறவர்கள் இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களில் ஃபைனான்ஸ், டிரஷரி, பட்ஜெட்டிங், காஸ்டிங், ஃபாரக்ஸ் மேனேஜ்மென்ட், இன்டெர்னல் ஆடிட்டிங் போன்ற வேலைகளுக்குச் செல்லலாம்.இந்த படிப்பில் நல்ல ரேங்க் ஹோல்டர், கிரேடு வாங்கியவர்கள் எனில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கிறார்கள். அமெரிக்காவிலும் பிராக்டீஸ்: ஐ சி டபிள்யூ ஏ ஐ ‘ ( இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அண்ட் வொர்க்ஸ் அக்கவுன்ட்ஸ் ஆஃப் இந்தியா ) யில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் இந்த பட்டத்தை கொண்டே அமெரிக்காவிலும் பிராக்டீஸ் செய்யலாம். அதற்கான அங்கீகாரத்தை அமெரிக்காவில் இருக்கும்’ ஐ எம் ஏ ‘ ( இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் அக்கவுன்ட்டன்ஸ் ) யிடம் ‘ ஐ சி டபிள்யூ ஏ ஐ ‘ பெற்றிருக்கிறது. இரு இன்ஸ்டிடியூட்களும் இதற்கான பரஸ்பர அங்கீகாரத்தை கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கின்றன.ஆனால் ஐ எம் ஏ யில் உறுப்பினர்களாக இருக்க விரும்புபவர்கள், ஐ சி டபிள்யூ ஏ ஐ யிலும் தொடர்ந்து உறுப்பினாக இருக்க வேண்டும். இந்தியாவில் காஸ்ட் அக்கவுன்டிங் படித்து தகுதி பெற்றவர்கள் 42,000 பேர் இருந்தாலும் 29,000 பேர் மட்டுமே ஐ சி டபிள்யூ ஏ ஐ யில் உறுப்பினர்களாக பதிவு செய்திருக்கிறார்கள். அதிலும் வெறும் 1,700 உறுப்பினர்கள் மட்டுமே காஸ்ட் அக்கவுன்டன்ட்களாக பிராக்டீஸ் செய்கிறார்கள். மீதி பேர் நிதி மற்றும் அக்கவுன்டிங் துறையில் பணியாற்றுபவர்களாகவே இருக்கிறார்கள்

ஏ.சி.எஸ். (கம்பெனி செகரட்டரிஷிப் )

என்ஜினீயரிங் படிப்பில் ஐ.டி., கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் -கம்யூனிகேஷன் படித்த பிறகும் வேலையில்லாதவர்கள் உண்டு. ஆனால், கம்பெனி செகரட்டரிஷிப் படித்து வேலையில்லாதவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, இன்னும் எத்தனை பேர் வந்தாலும் வேலைவாய்ப்பு திறந்தே கிடக்கிறது என்பது வியப்பான உண்மை.

  • ரூ. 2 கோடிக்கு மேல் செலுத்திய முதலீடு (Paidup Capital)செய்துள்ள நிறுவனங்கள் தகுதி பெற்ற கம்பெனி செகரட்டரியை நியமிக்க வேண்டும் என்பது சட்டப்படி முக்கியம்.
  • ரூ.2 கோடிக்குக் கீழே முதலீடு செய்தவர்கள் இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றவர்களை உதவி கம்பெனி செகரட்டரியாக அமர்த்தலாம்.பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள அனைத்து நிறுவனங்களும் கம்பெனி செகரட்டரியை நியமிக்கவேண்டும். இந்தப் படிப்பை முடித்தவர்களை மத்திய அரசின் உயர் பதவியில் அமர்த்தலாம் என கல்வி அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது. இப் படிப்பு முடித்தவர்கள் நிர்வாக இயக்குநர்களாக முழு நேர இயக்குநர்களாக, கம்பெனி தலைவர்களாக, துணைத் தலைவர்களாக பணியமர்த்தலாம். இவ்வாறு கம்பெனியில் சேர்ந்து பணியாற்றாமல், வழக்கறிஞர், மருத்துவர், பொறியாளர் போல் தனியாகவும் தொழில்முறை பணியை மேற்கொள்ளலாம்.

இவை மட்டுமின்றி ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு கம்பெனி செயலர் ஆலோசகர்களாகப் பணியாற்றவும் செய்யலாம். இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளைகளைத் தொடங்குகின்றன. அதுபோல், உலக நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளைத் தொடங்குகின்றன.எனவே, வேலைவாய்ப்பும் விரிவடைந்து வருகிறது. மேலும், பல்வேறு நாடுகளுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டங்கள், செயல்பாடுகள் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும். மேலும், பிரிட்டனின் “ஐ.சி.எஸ்.ஏ. -யு.கே.’ என்ற நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. கம்பெனி செகரட்டரி படிப்புக்கான தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில் இத்தேர்வுகள் நடைபெறும். மார்ச் 31-ம் தேதி பதிவு செய்தால், டிசம்பரில் தேர்வு எழுதலாம். செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பதிவு செய்தால் அடுத்து வரும் ஜூனில் தேர்வு எழுதலாம். 12-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் “கம்பெனி செகரட்டரிஷிப்’ படிப்பில் சேரலாம். இது போல் பட்டம் படித்தவர்களுக்கும், முதுநிலை படித்தவர்களுக்கும் படிப்புகள் உண்டு. வயது வரம்பு இல்லை.தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு 50 சதவீத கட்டணச் சலுகை உண்டு. சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பரிசுகள், பதக்கங்கள், உதவித் தொகைகள் உண்டு.

நிர்வாகவியல், தொழில்முறை பயிற்சி பெறுவோருக்கு இந்நிறுவனம் வேலைவாய்ப்பு வசதி செய்து தரும். அடிப்படைத் தேர்வு எழுதியவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் மேலாண்மையியல் படிப்பில் சேரலாம். பிறகு இறுதித் தேர்வு எழுதலாம். இறுதித் தேர்வு முடித்த பின் 16 மாத மேலாண்மைப் பயிற்சி (Management Training)பெறவேண்டும். அதன் பிறகு இன்ஸ்டிடியூட்டில் பதிவு செய்தால், ஏ.சி.எஸ். (Associate Company Secretary)முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும். கம்பெனிகள் ஆரம்பித்தல், கம்பெனிகள் பல்வேறு துறைகளில் அளிக்க வேண்டிய ஆவணங்களைச் சமர்ப்பித்தல், கம்பெனி நீதிமன்றங்களில் ஆஜர் ஆகுதல் ஆகிய பல்வேறு பணிகளில் ஈடுபடுகிறார்.

இது தவிர, பல்வேறு சட்டங்களின் கீழ் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights)கீழும் தொழில் புரியலாம். “”தற்போது நாடு முழுவதும் 21 ஆயிரம் பேர்தான் கம்பெனி செயலர்களாக இருக்கின்றனர். இன்னும் ஏழு ஆண்டுகளில் இதை 50 ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது” என்கிறார் இந்திய கம்பெனி செயலர் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த (The Institute of Company Secretaries of India)கெய்யூர் பக்ஷி. உலகமயமாதல் சூழ்நிலையில், இந்திய நிறுவனங்களிலும், வெளிநாட்டு நிறுவனங்களிலும் கம்பெனி செயலர் பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உருவாகி வருகிறது. கம்பெனிகள் பதிவாளர் அலுவலகம், செபி, ரிசர்வ் வங்கி ஆகிய அமைப்புகளின் வரைமுறைகளை கம்பெனிகள் சரியாகப் பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணித்து நடைமுறைப்படுத்தும் முக்கியமான பணியையும் மேற்கொள்கின்றனர்.

கம்பெனிகள் சட்டம், பங்குகள் பரிமாற்றம் குறித்த சட்டங்களில் கம்பெனி செகரட்டரி வல்லுநராக இருப்பார். நிறுவனத்தின் சட்டம், நிதி, கணக்கு, பணியாளர் நிர்வாகம், பொது நிர்வாகம் ஆகிய பல்வேறு துறைகளில் தொடர்புகொண்டு நிறுவனத்தை நடத்துகிறார்.அத்துடன் இயக்குநர்கள் குழு, பங்குதாரர்கள், அரசு, பொதுமக்கள், கம்பெனி ஊழியர்கள் ஆகியோர்களிடையே பாலமாகச் செயல்படுகிறார்.

பார்லிமென்டில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் நிறுவன விவகாரங்கள் துறையின் கீழ் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், சென்னை, கோல்கட்டா மற்றும் மும்பையில் 45 அலுவலகங்களையும் 24 துணை மையங்கள் மற்றும் 66 தேர்வு மையங்களையும் நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனம் நடத்தும் தேர்வுகள் வழியாக மட்டுமே கம்பெனி செகரட்டரியாக முடியும்.

அடிப்படைத் தேர்வு ((Foundation Course)4 தாள்கள் (கட்டணம் ரூ.3,600); மேலாண்மை நிலை (Executive Programme)6 தாள்கள், (கட்டணம் ரூ. 7,750); தொழில்முறைப் படிப்பு (Professional Programme)8 தாள்கள் (கட்டணம் ரூ.7,500). ஒவ்வொரு நிலையிலும் தேர்வான பின்னரே இன்னொரு நிலைக்கு உரிய தேர்வை எழுத முடியும். பவுண்டேஷன் தேர்வுக்கு – பிளஸ் 2 தேறியவர்கள் ரூ.3,600 பதிவு கட்டணம் செலுத்தி செப்டம்பர் 30க்குள் பதிவு செய்தால் அடுத்த ஆண்டு ஜூனில் தேர்வு எழுதலாம். பதிவு கட்டணம் செலுத்திய பின் மூன்று ஆண்டுகள் வரை தேர்வு எழுதலாம். எக்சிகியூடிவ் தேர்வுக்கு – கம்பெனி செகரட்டரி பவுண்டேஷன் தேறியவர்கள் அல்லது நுண்கலை தவிர்த்த இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஐ.சி.டபிள்யூ.ஏ., அல்லது சி.ஏ., இறுதி தேர்வு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.6,500 முதல் ரூ.7,750 வரை ஒவ்வொருவரின் தகுதியைப் பொறுத்து பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும். இருபிரிவுகளாக தேர்வு நடக்கிறது. பிப்ரவரி 28ம் தேதிக்குள் பதிவு செய்வோர் இரு பிரிவுகளையும், மே 31க்குள் பதிவுசெய்வோர் ஏதாவது ஒரு பிரிவுக்கான பாடங்களிலும் டிசம்பரில் தேர்வு எழுதலாம். ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பதிவு செய்வோர் இரு பிரிவுகளையும், நவம்பர் 30க்குள் பதிவுசெய்வோர் ஏதாவது ஒரு பிரிவுக்கான பாடங்களிலும் ஜூனில் தேர்வு எழுதலாம். பதிவு கட்டணம் செலுத்திய பின் 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுதலாம்.

புரபஷனல் தேர்வு – எக்சிகியூடிவ் தேர்வு முடித்தவர்கள் மட்டுமே இத்தேர்வு எழுத முடியும். பதிவுக்கட்டணம் ரூ.7,500. ஜூன் மற்றும் டிசம்பரில் நான்கு பிரிவுகளாக பாடங்கள் பிரிக்கப்பட்டடு தேர்வு நடைபெறும்.

கம்பெனி செகரட்டரி படிப்பின் அடிப்படைத் தேர்வு இணையவழிக் கல்வியாக (E-learning)நடப்பு ஆண்டில் நடத்தப்படும். கலந்துரையாடல், வினாடி-வினா ஆகிய பல்வேறு நூதன வழிகளில் கல்வி கற்பிக்கப்படும்.

நிர்வாகத்தின் முக்கிய நிலைகளில் பணியாற்றும் பொறுப்பு உள்ளதால் இந்த பதவியில் திறமைக்கு ஏற்ப நல்ல சம்பளங்களை பெற முடியும். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து தங்கள் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ள இந்த நிறுவனம் மூன்று நிலைகளில் தேர்வுகளையும் இரு நிலைகளில் உறுப்பினர் அந்தஸ்தையும் வழங்குகிறது.
தென்னிந்திய மண்டல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்கள், முந்தைய ஆண்டுக்கான கேள்வி -பதில் புத்தகம், இன்ஸ்டிடியூட் வெளியிடும் புத்ககம் கிடைக்கிறது. மாணவர்களை நேரடியாகச் சேர்க்கும் முறையும் உண்டு. மாணவர் சேர்க்கையில் உடனடி சேர்க்கையும் உண்டு. மேலதிக தகவல்களுக்கு….

Deputy Director,

The Institute of Company Secretaries of India,

No:9, ICSI – SIRC House, 9, Wheat Crofts Road,

Nungambakkam,

Chennai-34

Tel: 044- 2827 9898, 2826 8685. Fax: 044 2826 8685

Website: www.icsi.edu; Email: icsisirc@md3.vsnl.net.in